லண்டன் தி ஹண்ட்ரட் மகளிர் தொடரின் இறுதிப்போட்டியில், டிரென்ட் ராக்கெட்ஸ் அணி சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் என்பது இங்கிலாந்தில் நடைபெறும் ஒரு தொழில்முறை 100-பந்து போட்டியாகும். இதில் 8 அணிகள் பங்கேற்கும். இந்த தொடரின் 6-வது சீசன் தற்போது நடைபெற்றது. 91 ரன்களுக்கு சுருண்ட சன்ரைசர்ஸ் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப்போட்டியில் டிரென்ட் ராக்கெட்ஸ் - சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டிரென்ட் ராக்கெட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 100 பந்துகளில் 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அன்னபெல் சதர்லேண்ட் 25 ரன்களும், டேனியல் கிப்சன் 22 ரன்களும் எடுத்தனர். 54 பந்துகளில் இலக்கை எட்டியது 91 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய டிரென்ட் ராக்கெட்ஸ் அணி, 54 பந்துகளிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 92 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சோபியா டங்க்லி அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். பெத் மூனி 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி இதன் மூலம் டிரென்ட் ராக்கெட்ஸ் அணி 46 பந்துகள் மீதமிருந்த நிலையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தி ஹண்ட்ரட் மகளிர் தொடரின் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/ruthless-trent-rockets-bag-maiden-womens-hundred-title




