மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையத்தில் காயத்துடன் சுற்றித்திரி யும் பாகுபலி யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின் றனர். பாகுபலி யானை மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் அதனை சுற்றி உள்ள வனப்பகுதிகளில் கம்பீர தோற்றம் கொண்ட பாகுபலி என்று அழைக்கப்படும் காட்டுயானை சுற்றித்திரிந்து வருகிறது. இரவு நேரத் கோத்தகிரி சாலையில் உலா தில் உணவு மற்றும் நீர்நிலைகளை தேடி நெல் வந்த பாகுபலி யானை, சமயபுரம் சாலையை கடந்து குடியிருப்புகள் வழியாக கல்லார் வனப்பகுதி அருகே உள்ள தோட்டங்களில் புகுந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலை மற்றும் கோத்தகிரி சாலை ஆகிய சாலைகளை கடந்து சிறுமுகை வனப்பகுதிக்குள் இடம்பெயர்ந்து செல்வதை வழக்க மாக கொண்டுள்ளது. வால் பகுதியில் காயம் இதுவரை அந்த யானை யாரையும் விரட்டியதோ, தாக்கியதோ, பொதுமக்களின் உடைமைகளை சேதப்படுத்தியதோ இல்லை. காட்டுயானைகளின் இயற்கையான குணத்தை விட மிகவும் அமைதியான குணத்தை கொண்டது. கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் சமயபுரம் சாலை, ஊட்டி சாலை, கோத்தகிரி சாலை ஆகிய சாலைகளில் பாகுபலி யானையின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் வனப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பிற யானைகளுடன் ஏற்பட்ட மோதலில் பாகுபலி யானையின் வால் பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவதிப்பட்டு வரும் அந்த யானை நேற்று காலை கோத்தகிரி சாலையில் உலா வந்தது. ஆனால் வேகமாக நடக்க முடியாமல் மெல்ல, மெல்ல நடந்ததை காண முடிந்தது. அந்த யானயை வனத்துறையினர் தீவிரமாக கண்கா ணித்து வருகின்றனர். மேலும் காயத்துக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை யினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/baahubali-the-elephant-is-roaming-with-an-injury-forest-department-officials-are-taking-steps-to-provide-treatment




