கடந்த ஆண்டு தங்கம், வெள்ளி விலை பீக்கில் இருந்தது. இப்போது சரிவில் இருக்கிறது. இப்படி தங்கம், வெள்ளி விலை ஏறும் போதும், இறங்கும் போதும், தங்கம் சரியான மதிப்பு உடன்தான் வர்த்தகமாகிறதா என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதாவது, தற்போது தங்கம், வெள்ளி விற்பனை ஆகும் விலை Over-valued-ஆ, Under Valued-ஆ என்று யோசித்திருக்கிறீர்களா? அதற்கான பதிலை தருகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்Gold: தங்கம், வெள்ளியில் இப்போது சூப்பர் நேரம்! முதலீட்டாளர்களே இப்போ நீங்க என்ன செய்யணும்? "பங்குச்சந்தையின் மதிப்பிற்கு P/E ratio இருப்பது போல, தங்கம், வெள்ளி விலை மதிப்பை தெரிந்துகொள்வதற்கும் கோல்டு - சில்வர் ரேஷியோ என்று ஒன்று உண்டு. இந்த ரேஷியோ எப்படி கணக்கிடப்படும் என்றால், ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்க, எத்தனை அவுன்ஸ் வெள்ளி தேவைப்படும் என்பது தான் அந்தக் கணக்கு. இது விலை அடிப்படையில் கணக்கிடப்படும். உதாரணத்திற்கு, ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,000 டாலர் என்றும், ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 60 டாலர் என்றும் வைத்துகொள்வோம். இரண்டையும் வகுத்தால் 66.66 என்று வருகிறது. இந்த விகிதம் 65-70 என்று இருந்தால், அது 'நார்மல்' ஆக இருக்கிறது என்று பொருள். இந்த எண்ணை விட அதிகமாக இருக்கும் போது, நிறைய வெள்ளி இருந்தால் தான், ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்க முடியும் என்கிற நிலை உருவாகும். அப்போது வெள்ளி under valued, தங்கம் Over valued. ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்க குறைந்த வெள்ளியே போதும் என்றால், அப்போது வெள்ளி over valued. தங்கம் under valued. ITR Filing சீசன் இது; இன்னும் ஆதார் - பான் எண்ணை இணைக்கவில்லையா? என்ன, எப்படி செய்யலாம்? | How to முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/personal-finance/gold/gold-silver-ratio-the-key-to-spot-gold-real-value




