மெல்போர்ன், டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரர் என்றால் வெஸ்ட் இண்டீசின் அதிரடி ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசல்தான் என்று ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல் புகழாரம் சூட்டியுள்ளார். “அவரை தாண்டிச் செல்வது கடினம்” அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் எக்காலத்திற்குமான சிறந்த வீரர்கள் குறித்து பேசிய கிளென் மேக்ஸ்வெல், டி20 கிரிக்கெட்டில் ஆண்ட்ரே ரசலை தேர்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “டி20 போட்டிகளில் ஆண்ட்ரே ரசல் போன்ற ஒரு வீரரைத் தாண்டி செல்வது மிகவும் கடினம். அவரது பவர் ஹிட்டிங் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கும். அவர் அடிக்கத் தொடங்கிவிட்டால் யாராலும் அவரைத் தடுக்க முடியாது. அவர் பந்தை மிகவும் வேகமாகவும், வெகு தூரத்துக்கும் அடிக்கக்கூடியவர். அதோடு மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசுவார். சிறப்பாக பீல்டிங்கும் செய்வார். அவர் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர்” என்று பாராட்டினார். 9,919 ரன்கள். 535 விக்கெட்டுகள் டி20 கிரிக்கெட்டில் 607 போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்ட்ரே ரசல், 26.03 என்ற சராசரியுடன் 166.70 ஸ்டிரைக் ரேட்டில் 9,919 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 சதங்கள், 36 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 121 ரன்கள் ஆகும். மேலும், டி20 கிரிக்கெட்டில் இதுவரை 808 சிக்சர்களை விளாசியுள்ளார். பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டுள்ள ரஸல், 25.57 என்ற சராசரியில் 535 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 10 முறை 4 விக்கெட்டுகளும், ஒரு முறை 5 விக்கெட்டுகளும் அடங்கும். அவரது சிறந்த பந்துவீச்சு 5 விக்கெட்டுக்கு 15 ரன்கள் ஆகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/once-he-starts-hitting-no-one-can-stop-him-maxwell-picks-russell-as-the-best-t20-player




