சென்னை, திருக்குடை சேவாசமிதி அறக்கட்டளை சார்பில் திருப்பதி திருக்குடை பாதயாத்திரை ஊர்வலம் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை 8 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. வாகன ஒட்டிகள் ஈ.வெ.ரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையைப் பயன்படுத்தலாம் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மதியம் 3 மணி முதல் ஊர்வலம் யானைகவுனி பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. இதே போன்று ஊர்வலம் வரும் சமயத்தில் சூளை ரவுண்டானா, ராஜா முத்தையா சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஓட்டேரி சந்திப்பு கொன்னூர் ஒன் பாயிண்ட், ஓட்டேரி பாலம் ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர். ஊர்வலம் வரும் போது ஐ.சி.எப். சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் நியூ ஆவடி ரோடு வழியாகவும், மேடவாக்கம் டேங்க் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் எம்.டி. சாலை மற்றும் வி.பி. காலனி சந்திப்பில் இருந்து வி.பி. காலனி (தெற்கு) நோக்கியும் மாற்றி விடப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupati-sacred-umbrella-procession-traffic-diversions-in-chennai-tomorrow




