ராஞ்சி கடைக்குள் புகுந்து குரங்கு ஒன்று மதுபானம் குடித்து விட்டு, கடைக்குள்ளேயே உறங்கிய வீடியோ வைரலானது. ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரில் ஆர்மஞ்சி பகுதியில் பெண் குரங்கு ஒன்று யாருமில்லாத நேரத்தில் மதுபான கடைக்குள் புகுந்துள்ளது. அது மதுபான பாட்டில் ஒன்றை எடுத்து, குடித்தது. இதில் போதை ஏறியதும் கடைக்குள்ளேயே படுத்து உறங்கியது. வழக்கம்போல் பணியாளர்கள் காலையில் வேலைக்கு வந்துள்ளனர். கடையை திறந்து அவர்களுடைய வேலையை பார்க்க தொடங்கினர். தூங்கிய குரங்கு அப்போதுதான் கடைக்குள் தூங்கியபடி இருந்த அந்த குரங்கு படுத்தபடி, மெல்ல சுற்றி என்ன நடக்கிறது என்று பார்த்தது. ஆனால், அதனால் உடனடியாக எழுந்திருக்க முடியவில்லை. இதனை பார்த்து கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கடையை ஆய்வு செய்தபோது, மதுபான பாட்டில் ஒன்று காலியாக இருந்ததும் தெரிய வந்தது. அதனை திறந்j அந்த குரங்கு, எல்லாவற்றையும் குடித்து விட்டு, அட்டை பெட்டி மீதே படுத்து உறங்கியிருக்கிறது. இதன்பின்னர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து அதனை மீட்டு கொண்டு சென்றனர். மதுபான கடையில் குரங்கு படுத்து உறங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/monkey-drinks-liquor-sleeps-in-shop-viral-video




