23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணி) அமெரிக்காவின் டல்லாஸில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. பிரான்ஸ் - ஸ்பெயின் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி 3-வது இடத்துக்கான போட்டியில் விளையாடும். இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் களமிறங்கியுள்ளதால் போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இரு அணிகளும் தொடக்கத்தில் சிறப்பாக ஆடின. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி ஸ்பெயின் வீரர் ஒயார்சபால் கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து பிரான்ஸ் அணி பதிலடி கொடுக்க போராடியும் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஸ்பெயின் வெற்றி தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் நடைபெற்றது. இரண்டாம் பாதி ஆட்டத்திலும் ஸ்பெயின் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 58வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் பெட்ரொ பேரோ இரண்டாவது கோலை பதிவு செய்தார். இதனை தொடர்ந்து பிரான்ஸ் வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/football/spain-defeated-france-and-advanced-to-the-final




