சென்னை, ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆக்கி அணி மீண்டும் நீல சீருடையில் களமிறங்குகிறது. 'பி' பிரிவில் இந்தியா 20-வது ஆசிய விளையாட்டு போட்டி வருகிற 19-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை ஜப்பானின் அய்ச்சி, நகோயா நகரங்களில் நடக்கிறது. இதன் ஆக்கி போட்டியில் பெண்கள் பிரிவில் 12 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரி வாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் சீனா, தென்கொரியா, மலேசியா, கஜகஸ்தான், சீன தைபே. வங்காளதேசம், 'பி' பிரிவில் இந்தியா, ஜப்பான், தாய்லாந்து, சிங் கப்பூர், இந்தோனேசியா. உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. டாப்-2 ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். மீண்டும் நீல நிற சீருடை உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய ஆக்கி அணி பாரம்பரியமான நீல நிறத்துக்கு பதிலாக ஆரஞ்சு நிற சீருடை அணிந்து ஆடியது. இதனால் ஆக்கி அணியில் காவி கலாசாரம் புகுத்தப்படுவ தாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்திய ஆக்கி அணி மீண்டும் நீல நிற சீருடைக்கு மாறுகிறது. -! ✈️ The Indian Women’s Hockey Team has departed for Japan, ready to chase glory at the Asian Games 2026! Eyes on the Gold! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/hockey/asian-games-indian-hockey-team-takes-the-field-in-blue-uniforms-again




