நெல்லை, நெல்லை மாவட்டம் காடன்குளம் பகுதியில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அருகே, மதுபான கடை மற்றும் பார் அமைக்கப்பட்டு, நேற்று இரவோடு இரவாக விற்பனை தொடங்கியதாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் போராட்டக்காரர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, மதுபானக் கடை திறக்கப்படாது என போலீசார் உறுதியளித்ததால் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-liquor-shop-opened-overnight-villagers-stage-a-siege




