கேந்திரப்பாரா ஒடிசாவில் குடிபோதையில் மாணவ மாணவிகளை பள்ளியின் உள்ளே வைத்து பூட்டி சென்ற தலைமையாசிரியர் ஒடிசாவின் கேந்திரப்பாரா தேராபீஷ் பகுதிக்குட்பட்ட குருஜங்கா கிராம பஞ்சாயத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆம்புரா அரசு முதன்மை பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருபவர் சுனாகர் நாயக். இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்க கூடிய மாணவ மாணவிகள் பள்ளியில் இருந்துள்ளனர். அப்போது, பணி நேரத்தில் குடிபோதையில் இருந்த சுனாகர், அவர்களை உள்ளே வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையறிந்த மாணவ மாணவிகள் அச்சத்தில் கத்தி கூச்சலிட்டனர். பெற்றோர்கள் ஆத்திரம் இதனை அறிந்து, உள்ளூர்வாசிகள் ஓடிச்சென்று கதவை திறந்து அவர்களை வெளியே மீட்டனர். இந்த சம்பவம் பற்றி சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதனால், பெற்றோர்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினர். கல்வி அதிகாரி மதன் மோகன் கர், விசாரணை நடத்தினார். இதில், அந்த பள்ளியில் 35 மாணவ மாணவிகளும், 2 ஆசிரியர்களும் இருந்தனர். சம்பவ நாளில் சுனாகர் மட்டுமே பள்ளியில் இருந்துள்ளார். மற்றோர் ஆசிரியர் விடுப்பில் இருந்துள்ளார். இந்த விவகாரத்தில் சுனாகர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/odisha-drunk-principal-locks-students-inside-school




