சென்னை, "இந்த படம் அஜித் சாரின் நீண்ட நாள் கனவுப் திட்டம் அவரே என்னை அழைத்து இந்த ரேசிங் அனுபவத்தைப் படமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்"என இயக்குநர் ஏ.எல் விஜய் தந்தி டிவிக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 'அஜித்குமார் ரேசிங்' தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் கார் பந்தய வீரராகவும் திகழ்கிறார். கார் பந்தயத்திலும் தீவிர ஆர்வம் கொண்டுள்ள அஜித், 'குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு மீண்டும் சர்வதேச ரேசிங் போட்டிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தனது சொந்த அணியான 'அஜித்குமார் ரேசிங்' மூலம் பல்வேறு சர்வதேச தொடர்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார். அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணம் இதற்கிடையில், அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்' ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். அஜித்குமாரின் மனைவி ஷாலினியே தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் நேற்று குறிப்பிட்ட சில தியேட்டர்களில் மட்டுமே வெளியானது. அஜித்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணம், அவர் சந்தித்த சவால்கள் மற்றும் கார் பந்தய மைதானத்தில் அவர் காட்டும் ஈடுபாடு ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் இந்த படத்தின் டிரெய்லர் அமைந்திருந்தது. இது அஜித் சாரின் நீண்ட நாள் கனவுப் திட்டம் இந்த நிலையில், 'கிளாடியேட்டர்ஸ்' ஆவணப்படத்தின் இயக்குநர் ஏ.எல் விஜய் தந்தி டிவிக்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில், "இந்த படம் அஜித் சாரின் நீண்ட நாள் கனவுப் திட்டம் அவரே என்னை அழைத்து இந்த ரேசிங் அனுபவத்தைப் படமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வழக்கமாக இணையதளங்களில் வெளியாகும் டிரெய்லர்களுக்கு மத்தியில் முதன்முறையாகத் திரையரங்கில் ரசிகர்கள் முன்னிலையில் இந்த டிரெய்லரை வெளியிட்டது ரசிகருடன் சேர்ந்து பார்த்தது புதிய அனுபவமாக இருந்தது. கார் ரேசிங் களத்தில் நடக்கும் அனைத்து விஷயங்கள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களை எந்தவிதப் புனைவும் இன்றி நேரடியாகப் பதிவு செய்துள்ளோம். பந்தயக் களத்தில் அஜித் சாரின் அர்ப்பணிப்பு மிக பயங்கரமாக இருக்கும். அவர் ஒரு ரியல் ஹிரோ என்பதை நிரூபித்து விட்டார். நாங்கள் நேரடியாக படம் பிடிக்கும்போது மிகுந்த சந்தோஷமாக இருந்தது ரியல் ஹிரோவாகக் களத்தில் அஜித் சார் காட்டிய உழைப்பை நேரடியாகப் படமாக்கியது எங்களுக்குப் புதுமையான அனுபவமாக இருந்தது. நாங்கள் நேரில் படம் பிடிக்கும்போது மிக சந்தோசமாக இருந்தது படத்தை பார்க்கும் போது ரசிகர்களுக்கு முழுமையாகக் அந்த சந்தோசம் கிடைக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/this-is-ajith-sirs-dream-project-director-al-vijays-interview




