புதுடெல்லி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஞானேஷ்குமார் இந்தியாவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை நடத்தும் தன்னாட்சி அமைப்பாக தேர்தல் கமிஷன் உள்ளது. நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்களில் முக்கியமானதும், மக்களின் வாக்குரிமையை நிலைநாட்டும் அமைப்புமான தேர்தல் கமிஷனில் தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் 2 தேர்தல் கமிஷனர்கள் பதவி வகித்து வருகின்றனர். நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல்களை நடத்துவதுடன், வாக்காளர் பட்டியல் மீதான நடவடிக்கை உள்ளிட்ட தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளில் இந்த 3 பேரும் இணைந்து முடிவுகளை எடுப்பது வழக்கம். அந்தவகையில் நாட்டின் தலைமை தேர்தல் கமிஷனராக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டார். அவருக்கு கீழே சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் தேர்தல் கமிஷனர்களாக உள்ளனர். தேர்தல் கமிஷனர்கள் அதிருப்தி இந்த நிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பிற 2 தேர்தல் கமிஷனர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக, நாடு முழுவதும் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் ஏராளமான வாக்காளர்களை நீக்கியது மற்றும் பல்வேறு முக்கிய முடிவுகளுக்கு இவர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் கடந்த 10 மாதங்களில் 14 முறை தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக 2 தேர்தல் கமிஷனர்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆனால் தேர்தல் கமிஷனர்களின் இந்த அதிருப்தியையும் மீறி ஞானேஷ்குமார் தன்னிச்சையாக முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு இது நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு ஆளாகி வரும் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்திலும், எதிர்க்கட்சிகள் பதவிநீக்க நோட்டீஸ் அளித்தனர். இரு அவைகளிலும் வழங்கப்பட்ட அந்த நோட்டீசுகளை அவைத்தலைவர்கள் நிராகரித்து விட்டனர். இந்த சூழலில் அவர் மீது, சக தேர்தல் கமிஷனர்களே அதிருப்தி வெளியிட்டிருக்கும் தகவல் நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கின்றன. இந்த விவகாரத்தில் ஞானேஷ்குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இந்நிலையில் மற்ற இரு ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 32-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) தொடர்பான அத்தகைய அனைத்து முடிவுகளும் சட்டவிரோதமானவை என அறிவிக்க வேண்டும் என்றும், அசல் படிவம் 6-ஐ மீட்டெடுக்கவும், திருத்தப் பணியின் போது வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) மூலம் விசாரணை நடத்தவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/plea-in-supreme-court-seeks-criminal-prosecution-of-cec-gyanesh-kumar




