சென்னை, சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் திருமணமான 22 வயது அண்ணாநகர், பெண் 5 வது அவென்யூவில் உள்ள ஓட்டல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அந்த பெண்னை வழிமறித்து வேலைக்கு ஆள் தேவைப்படுகிறது, விருப்பம் உள்ளதா? என கேட்பார். அதற்கு அந்த பெண் சம்மதித்தார். உடனே அவரை அண்ணா நகர், 2-வது அவென்யூவில் உள்ள ஒரு கடைக்கு மேல் அழைத்துச்சென்று மாடி மற்றும் மாடிப்படிகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் மாடியை காட்டுகிறேன் என சென்று, அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பெண் சத்தம்போடவே, அந்த நபர் தப்பிச் சென்றார். கைது பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார், அண்ணாநகர் போலீசார் பி. என்.எஸ். மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து பாலியல் தொல்லை கொடுத்த திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் கன்னடபாளையத்தை சேர்ந்த ஆனந்தன் (வயது 37) என்பவரை கைது செய்தனர். கைதான ஆனந்தன் ஜிம் பயிற்சியாளர் மற்றும் பகுதி நேர கார் டிரைவராக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/gym-trainer-arrested-for-raping-woman-on-the-pretext-of-getting-her-a-job




