கோவை, தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கருப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே, நடிகர் சூர்யா தற்போது விஸ்வநாத் & சன்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. கோவையில் நடிகர் சூர்யா இந்நிலையில், விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோவையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் படக்குழுவினர் பங்கேற்கின்றனர். விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த நடிகர் சூர்யாவுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/viswanath-and-sons-audio-launch-event-actor-surya-arrives-in-coimbatore




