சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள புதுகொத்தாம்பாடியைச் சேர்ந்த பெண்கள் சிலருக்கு நேற்று முன்தினம் இரவு புது எண்களில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. தாசில்தார் அலுவலகத்தில் இருந்து அழைப்பதாகவும், வெளி நாடுகளில் வேகமாக பரவி வரும் புதுவித நோய் இந்தப் பகுதியில் பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறிய அவர்கள், மொட்டை அடித்துக் கொண்டால் நோய் பாதிப்பு ஏற்படாது என்று கூறியுள்ளனர். மேலும், மொட்டை அடித்துக்கொள்ளும் ஆண்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாயும் பெண்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாயும் அரசு மூலம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர். இதை உண்மையென நம்பிய மக்கள், FRAUD சலூன் கடைக்காரரை ஊருக்கு வரவழைத்து 3 பெண்கள் மொட்டை அடித்துள்ளனர். மற்றவர்களும் மொட்டை அடித்துக் கொள்ள வரிசையில் நின்றுள்ளனர். பணத்தைக் கொண்டு வருவதாகச் சொன்ன அந்த நபர்களின் செல்போன் திடீரென ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதால் சந்தேகமடைந்த மக்கள், ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/salem-women-lose-their-hair-in-a-modern-day-scam




