சென்னை, அனைத்து தரப்பு மக்களும் தங்களுக்கான சொந்த வீட்டை எளிதில் பெறும் சூழலை உருவாக்குவது நமது நோக்கம் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். “சொந்த வீடு” இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- திருச்சி மாவட்டம் CREDAI Fair 2026 நிகழ்வில், திருச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் கலந்து கொண்டேன். இந்நிகழ்வில் பங்கேற்ற ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகள், வங்கி நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, ஏழை, எளிய மக்கள் மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் “சொந்த வீடு” என்ற கனவை நனவாக்கும் வகையில், குறைந்த விலையில் தரமான வீடுகளை கட்டித் தருவதற்கும், வீடு வாங்குவதற்குத் தேவையான கடன் வசதிகளை எளிதாகவும், குறைந்த வட்டியிலும் பெற்றுத் தருவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன். நோக்கம் அனைத்து தரப்பு மக்களும் தங்களுக்கான சொந்த வீட்டை எளிதில் பெறும் சூழலை உருவாக்குவது நமது நோக்கம். மக்களின் வாழ்வாதார முன்னேற்றமும், அவர்களின் சொந்த வீடு என்ற கனவை நனவாக்குவதும் நமது முன்னுரிமை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/our-objective-is-to-create-an-environment-where-people-from-all-walks-of-life-can-easily-own-a-home-minister-ramesh




