நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ‘கருப்பு’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’, ‘சூர்யா 47’ ஆகிய படங்களில் ஒப்பந்தமானார். இதில், வெங்கட் அட்லுரி இயக்கிய ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, பிரபல மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘சூர்யா 47’ என அழைக்கப்படும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் மலையாள நடிகர் நஸ்லேன் மற்றும் நடிகை நஸ்ரியா நசீம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். போலீஸ் அதிகாரியாக சூர்யா? 'ஆவேஷம்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் இந்த படத்தில் சூர்யா எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையில், படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை நகரில் நடைபெற்று வரும் இறுதி கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என தகவல் வெளியானது. படப்பிடிப்பு நிறைவு இந்நிலையில், சூர்யாவின் 47-வது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. It's a wrap for. ♂️ முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/suriyas-47th-film-shooting-wrap




