சென்னை, துலீப் கோப்பை இறுதிப்போட்டியில் திலக் வர்மா 1 ரன்னில் சதத்தை தவறவிட்டார். இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தெற்கு மண்டலம் - கிழக்கு மண்டலம் அணிகள் இடையிலான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கிழக்கு மண்டலம் 708 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் இஷான் கிஷன் அபாரமாக விளையாடி 270 ரன்கள் விளாசினார். ஒரு ரன்னில் இதையடுத்து 3-வது நாளில் முதல் இன்னிங்சை தொடங்கிய தெற்கு மண்டலம், ஆட்ட நேர முடிவில் 80 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் திலக் வர்மா 56 ரன்களுடனும், சாமா மிலிந்த் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தெற்கு மண்டலம் 336 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கேப்டன் திலக் வர்மா சிறப்பாக விளையாடி 99 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். வெறும் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். 2-வது இன்னிங்ஸ் இதையடுத்து 372 ரன்கள் முன்னிலையுடன் கிழக்கு மண்டலம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 8 ரன்களிலும், அபிமன்யு ஈஸ்வரன் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தற்போது கேப்டன் இஷான் கிஷன் மற்றும் ஷிகர் மோகன் ஆகியோர் களத்தில் உள்ளனர். South Zone are 336 all out. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/duleep-trophy-final-out-for-99-tilak-varma-misses-out-on-a-century




