மும்பை, மராட்டிய மாநிலம் நாக்பூரில் ஏராளமான அரசு, தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. வெடிகுண்டு மிரட்டல் இந்நிலையில், நாக்பூரில் செயல்பட்டு வரும் 12 பள்ளிகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளிகளில் உள்ள இ-மெயில்களுக்கு மர்ம நபர் அனுப்பிய மெயிலில் பள்ளிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வெடிகுண்டுகள் வரும் 31ம் தேதி வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மெயிலால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாணவ, மாணவியரை வீடுகளுக்கு அனுப்பினர். வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் 12 பள்ளிகளிலும் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, இமெயில் மூலம் 12 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/maharashtra-bomb-threat-to-schools-shocking-incident




