டல்லாஸ், 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முந்தைய (ரவுண்ட் ஆப் 16) ஆட்டத்தில் போர்ச்சுகலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், காலிறுதிக்கு முன்னேறியது. இந்த தோல்வியுடன் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை பயணமும் நிறைவுக்கு வந்தது. 2006-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முதன்முறையாக களமிறங்கிய ரொனால்டோ, இந்த தொடரே தனது கடைசி உலகக் கோப்பை என்று போட்டிக்கு முன்பே அறிவித்திருந்தார். அதனால் இப்போட்டியில் இறுதி விசில் ஒலித்ததும் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்ததை உணர்ந்த அவர், மைதானத்திலேயே கண்ணீரை அடக்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்டார். பின்னர் இது தொடர்பாக பேசிய ரொனால்டோ கூறியதாவது, உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் எனது முழு முயற்சியையும், மிகச் சிறந்த ஆட்டத்தையும் வெளிப்படுத்தினேன்.நாங்கள் சிறப்பாக விளையாடினோம், எங்கள் ஆட்டம் நன்றாக இருந்தது. இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம். இதுதான் எனது கடைசி உலகக் கோப்பை, உண்மைதான். இனி குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதற்கும் எனக்கு அவகாசம் கிடைக்கும். என தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/football/shock-defeat-at-the-world-cup-what-did-ronaldo-say




