புதுடெல்லி, மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகத்தின்(DGHS) அங்கமான மருத்துவக் கலந்தாய்வுக் குழு (MCC), அகில இந்திய ஒதுக்கீட்டு (AIQ) இடங்களை நிரப்புவதற்கு 2026-27 ஆம் ஆண்டிற்கான கலந்தாய்வு அட்டவணையை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (mcc.nic.in) வெளியிட்டுள்ளது. இதன்படி, 2026-27 ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 4-ந்தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு 4-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரையிலும், மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு 13-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/counseling-for-undergraduate-medical-courses-begins-on-the-4th




