மெல்போர்ன், ஒருநாள் கிரிக்கெட்டில் தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த வீரர் விராட் கோலி என்று ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் புகழாரம் சூட்டியுள்ளார். “அவர் வேற லெவல்” அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் எக்காலத்திற்குமான சிறந்த வீரர்கள் குறித்து பேசிய மேக்ஸ்வெல், ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியை தேர்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் ஒருநாள் கிரிக்கெட்டில் பார்த்த மிகச்சிறந்த வீரர் கோலிதான். எங்களுக்கு எதிராக அவர் விளையாடிய சில இன்னிங்ஸ்கள் நம்பமுடியாதவை. மைதானத்தில் தான் விரும்பும் இடத்திற்கு பந்தை அவரால் அடிக்க முடியும். அவர் உண்மையிலேயே வேற லெவல்” என்று தெரிவித்தார். 14,941 ரன்கள் குவிப்பு விராட் கோலி இதுவரை 314 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 58.59 சராசரியுடன் 54 சதங்கள், 79 அரைசதங்கள் உள்பட 14,941 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். குறிப்பாக வெற்றிகரமான ரன்-சேஸ்களில் விராட் கோலியின் சாதனை அபாரமானது. 111 போட்டிகளில் 105 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள அவர், 89.07 சராசரியுடன் 24 சதங்கள், 29 அரைசதங்கள் உள்பட 6,235 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஆண்டும் சிறப்பான ஆட்டம் இந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடிய விராட் கோலி, 64.00 சராசரி மற்றும் 106-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டுடன் 384 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும், 3 அரைசதங்களும் அடங்கும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/virat-the-best-ever-ive-seen-in-odis-glenn-maxwell-hails-ex-rcb-teammate




