சென்னை, சட்டசபை கூட்டத்தொடர் முடியும் வரை அலுவலக பணியாளர்கள் காலை 9 மணிக்கு பணிக்கு வர பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 8-ம் தேதி வரை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பள்ளிக்கல்வி மானிய கோரிக்கை வருகிற 24-ம் தேதி வருகிறது. அப்போது கல்வித்துறை சார்பில் எம்.எல்.ஏக்களால் எழுப்படும் கேள்விகளுக்கு உடனுக்குடன் விரிவாக பதில் அளிக்கப்படும். இதற்காக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் பணியார்கள் சட்டசபை கூட்டத்தொடர் முடியும் வரை தினமும் காலை 9 மணிக்கு அலுவலகத்திற்கு வந்து சட்டசபை கேள்விகளுக்கு பதிலை உடனடியாக தயார் செய்து பள்லி கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அலுவலக நேரம் முடிந்த பின்னர் அலுவலரின் அனுமதி பெற்ற பின்பே அலுவலகத்தை விட்டு செல்ல அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. விடுமுறை நாட்களில் சுழற்சி முறையில் பணியாளர்களை அலுவலகத்தில் பணிபுரிய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் அனைத்து மாவட்ட கல்வி, அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-office-employees-ordered-to-report-for-work-at-9-am




