சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 கூடி, ஒரு சவரன் ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 5-ந்தேதியில் இருந்து உயர்ந்து வருகிறது. அன்றைய தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்திருந்தது. நேற்று முன் தினம் மட்டும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தங்கம் விலை இந்த சூழலில், தங்கம் விலை நேற்று காலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே தங்கம் விலை நேற்று மாலையில் சற்று குறைந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,150-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இதன்படி அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிலோ வெள்ளி ரூ,2,60,000க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.260க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-rise-again-what-is-the-situation-today-12082026




