சென்னை, சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரனுக்கு முதல்-அமைச்சரும், பெரம்பூர் எம்.எல்.ஏ.வுமான விஜய் கடிதம் எழுதி உள்ளார். முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பெரம்பூர் பகுதி மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் திட்டங்களுக்காக, தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 கோடியை ஒதுக்கீடு செய்யுமாறு, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரனுக்குக் கடிதம் எழுதியுள்ளார். விளையாட்டு வளாகம் அதில், * எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, சிட்கோ நகர், எஸ்.எம். நகர், எம்.கே.பி. நகர் மற்றும் வியாசர்பாடி மேம்பாலச் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில், சிசிடிவி (CCTV), வைபை (Wi-Fi) மற்றும் 24 மணி நேரக் கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய 6 நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்படுவதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது. * மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு வளாகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. * கூடைப்பந்து, கிரிக்கெட், கபடி விளையாட்டு வசதிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை மேம்படுத்த அம்பேத்கர் கலைக் கல்லூரிக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும். டயாலிசிஸ் மையம் * சத்தியமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் டயாலிசிஸ் (சிறுநீரகச் சுத்திகரிப்பு) மையம் அமைக்கப்படும். * எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 'தற்காலிகப் பணியாளர்களுக்கான' (Gig Workers) ஓய்வறை அமைக்கப்படும். * அம்பேத்கர் கல்லூரியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் பயிலரங்கம் (Study Centre) உருவாக்கப்படும். அங்கன்வாடி மையங்கள் * அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்படும். மேற்கூறிய அனைத்துப் பணிகளையும் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் பரிந்துரைத்துள்ளார். இந்ததிட்டங்கள் அனைத்தும் உடனடியாக தொடங்கப்பட உள்ளநிலையில், பெரம்பூர் பகுதி விரைவான வளர்ச்சியையும், மேம்பட்ட பொது வசதிகளையும் பெறும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-writes-to-the-chennai-corporation-commissioner




