தீபாவளி இரவில் ஆள் இல்லாத, ரயில் பெட்டியில், எட்டாயிரம் ஆண்டுகளாகத் தன் காதலைத் தேடும் நிவின் பாலியும், தன் குடும்பத்தைப் பிரிந்து எட்டு ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பும் சூரியும் சந்தித்துக்கொள்கிறார்கள். நிவினின் தோற்றமும் முரட்டுத்தனமும் சூரியைப் பயமுறுத்துகின்றன. அவரிடமிருந்து தப்பிக்க அவரிடம் பேச்சுக் கொடுக்கும் சூரிக்கு என்னென்ன நடக்கின்றன, நிவினின் காதலியான அஞ்சலி யார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ராம் இயக்கியிருக்கும் 'ஏழு கடல் ஏழு மலை'. ஏழு கடல் ஏழு மலை விமர்சனம்: நீண்ட முடி, அடர்த்தியான தாடி, எந்த நேரத்தில் எதைச் செய்வார் என்ற பதற்றத்தைக் கொடுக்கும் உடல்மொழி போன்றவற்றால் அக்கதாபாத்திரம் கோரும் மர்மத்தைக் கொண்டுவந்திருக்கிறார் நிவின் பாலி. ஆங்காங்கே வரும் அன்பு, காதல், ஆக்ரோஷம், நையாண்டி போன்றவற்றாலும் வலுசேர்க்கிறார் நிவின். ஆங்காங்கே அவருக்காக டப்பிங் கொடுத்திருக்கும் இயக்குநர் ராமின் குரல் மட்டும் சில இடங்களில் பொருந்தாமல் நிற்கிறது. அப்பாவித்தனம், ஆற்றாமை, சேட்டை, அழுகை, ஆங்காங்கே மிகை நடிப்பு எனத் தனக்குப் பழக்கப்பட்ட சட்டையை மீண்டும் உடுத்தியிருக்கும் சூரியின் நடிப்பில் குறையில்லை. காதலையும், அது தரும் கிரக்கத்தையும், சிறிது மர்மத்தையும் கலந்து தரும் கதாபாத்திரத்திற்கு அஞ்சலி கச்சிதமான தேர்வு. படம் பெரும்பாலும் ஒற்றை ரயில் பெட்டிக்குள்ளேயே சுழன்றாலும், அதைத் திகட்ட வைக்காத ஷாட்களாலும், காடு, மலை, கடல், கடற்கரை என வெவ்வேறு நிலவியல்களை அழகியலோடு பதிய வைக்கும் ஃப்ரேம்களாலும் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம் படத்தின் தூணாக நிற்கிறார். ஆனாலும், எக்கச்சக்க ஏஐ காட்சிகள், ஒளிப்பதிவின் அழகையும், நேர்த்தியையும் குலைக்கவே செய்கின்றன. ஏழு கடல் ஏழு மலை விமர்சனம்: சில காட்சித்தொகுப்புகளிலும், சண்டைக்காட்சிகளிலும் மதி வி.எஸ்ஸின் படத்தொகுப்பு கவனிக்க வைத்தாலும், படம் முழுவதுமே காட்சிகள் தாவித்தாவி ஓடும் உணர்வையே தருகின்றன. Dorothy Review: பாலினம் குறித்த உரையாடல் - தமிழ் சினிமா பேசத் தயங்கும் விஷயங்களைத் தொடும் டோரதி! யுவன் ஷங்கர் ராஜா - சந்தோஷ் தயாநிதியின் இசை கூட்டணியில் வரிசைக்கட்டும் பாடல்களில் சில காதலை ஒளிரவிட்டாலும், மற்றவை வேகத்தடைகளே. ஆனால், எல்லா உணர்வுபூர்வமான தருணங்களையும் மெருகேற்றியிருக்கிறது இக்கூட்டணியின் பின்னணி இசை. நிவின், சூரிக்கு இடையிலான உரையாடலோடு தொடங்குகிறது படம். நிவினின் பின்கதை, தீராக் காதலின் தேடல், அத்தனை ஆண்டுகளின் நினைவுகள் போன்றவை தொடக்கத்தில் சுவாரஸ்ய மூட்டுகின்றன. நிவினின் பல்வேறு காலகட்டங்கள், ஒரே காதல் என ஒருபக்கம் ரசிக்க வைக்கிறது கதாபாத்திர வடிவமைப்பு. ஆனால், சிறிது நேரத்திலேயே ரயில் பெட்டியில் மாட்டிய எலி, ஜீவகாருண்யம், ஆதி மனிதனின் பெருமை, அவர்களின் பழக்க வழக்கம், விலங்குகளின் கதைகள் என அறிவுரைகளும், தத்துவார்த்த வகுப்புகளும் படத்திலிருந்து நம்மை விலக வைக்கின்றன. ஏழு கடல் ஏழு மலை விமர்சனம்: எட்டு ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து, துபாயில் கட்டடம் கட்டுமிடங்களில் இரும்பு ராடுகளைத் தூக்கிச் சுமந்த தொழிலாளரை கலாய்த்து வதைப்பது என்ன லாஜிக் சார்? மேலும், பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை என்ற கணக்காக எக்கச்சக்க செயற்கையான ஏஐ காட்சித்தொகுப்புகளும் திகட்ட வைக்கின்றன. ஆங்காங்கே நிவினுக்கும், சூரிக்கும் நடக்கும் மோதல்களும் சண்டைகளும் சிறிது விறுவிறுப்பைக் கூட்ட முயன்றாலும், அவற்றிலும் நடக்கும் தத்துவார்த்த வகுப்பு விறுவிறுப்பை எட்டி உதைக்கிறது. இரண்டாம் பாதியில் மீண்டும் காதல் எனும் மையக்கதையை எட்டிப் பிடிக்கிறது திரைக்கதை. மூன்று காலகட்டங்களில் நடக்கும் நிவினின் காதல் கதைகளும், அவற்றில் நடக்கும் உரையாடல்களும் காதலின் கதகதப்பைச் சிறிதளவு பார்வையாளர்களுக்கும் கடத்துகின்றன. இவற்றுக்குப் பின்னணி இசையும் கைகொடுத்திருக்கிறது. ஆனால், மீண்டும் முதல் பாதியின் தண்டவாளத்திற்கு மாறும் திரைக்கதை, மீண்டும் தத்துவம், அறிவுரை, தேவையில்லாத ஆக்ஷன் என அயர்ச்சியையே தந்து முடிகிறது. ஓர் எலியின் உயிரையும், ஒரு சிறுவனின் உயிரையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்கும் வசனங்களுக்கான காரணங்களும் ஆழமாகச் சொல்லப்படவில்லை. ஏழு கடல் ஏழு மலை விமர்சனம்: காதல் மணமும், சுவாரஸ்யம் தரும் ஒன்லைனும் ரசிக்க வைத்தாலும், தெளிவில்லாத திரைக்கதையும், திகட்ட வைக்கும் வசனங்களும் ஏழு கடல்கள் ஏழு மலைகளை நடந்தே கடந்துவிட்ட அயர்ச்சியைப் பார்வையாளர்களுக்குத் தருகின்றன. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள. உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன். Meesaya Murukku 2 Review: கமர்ஷியல் பார்முலாவில் காணாமல்போகும் இசை அரசியல்! படமாக எப்படி? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://cinema.vikatan.com/kollywood/nivin-pauly-soori-starrer-rams-yezhu-kadal-yezhu-malai-movie-review



