தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட நீதிமன்றம்- I தீர்ப்பளித்துள்ளது. முன்விரோதத்தில் கொலை; 3 பேர் கைது தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு மேலநாட்டார்குளம் பகுதியில் வைத்து செல்லையா மகன் குரு என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதே பகுதியை சேர்ந்த முத்தையா என்பவரது மகன்களான மாசிலாமணி (வயது 34), துரை(36) மற்றும் குருநாதன் மகன் செல்லதுரை(54) ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 3 பேருக்கு ஆயுள் தண்டனை இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் (ADJ - I) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி தாண்டவம் நேற்று மாசிலாமணி, துரை மற்றும் செல்லதுரை ஆகிய 3 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு தலா ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-3-people-sentenced-to-life-imprisonment-in-murder-case




