ஜமைக்கா, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரை 1-0 என்ற புள்ளி கணக்கில் இலங்கை கைப்பற்றியது. டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று 1-0 என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை பெற்றது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி 3ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்செயா டி சில்வா பேட்டிங்கை தேர்வு செய்தார். 549 ரன்களுக்கு டிக்ளேர் இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 549 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. சிறப்பாக ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர் லஹிரு உதாரா அதிகபட்சமாக 188 ரன்களும், சோனல் தினுஷா 92 ரன்களும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப், ஷேடன் சீல்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 499 ரன்களுக்கு ஆல் அவுட் இதனை தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 499 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அந்த அணியின் ஜஸ்டின் கிரிவெஸ் 180 ரன்களையும், ஷாய் ஹோப் 112 ரன்களையும் குவித்தனர். 251 ரன்களில் டிக்ளேர் இதையடுத்து, 50 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. டிரா ஆனால், வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் இழப்பின்றி 109 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 5ம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை இடையேயான 2வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதன் மூலம் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/west-indies-vs-sri-lanka-2nd-test-match-drawn




