சென்னை, காய்ச்சல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுகுங்கள் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். காய்ச்சல் பாதிப்பு இது தொடர்பாக, அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாட்டில் டெங்கு நிலவரம்: தொடர்ந்து 3 ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது: 56,863 (2023) → 46,971 (2024) → 25,585 (2025) → 17,049 (2026, இதுவரை). ஒவ்வொரு காய்ச்சல் பாதிப்பும் கண்காணிக்கப்படுகிறது; காய்ச்சல் முகாம்கள், கொசு ஒழிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. அலட்சியம் கூடாது அச்சம் தேவையில்லை - ஆனால் அலட்சியமும் கூடாது. வீடுகளில் தேங்கிய நீரை அகற்றுங்கள்; காய்ச்சல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுகுங்கள். இணைந்து செயல்படுவோம், தமிழ்நாட்டை பாதுகாப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/no-need-for-alarm-dengue-cases-have-been-declining-for-three-consecutive-years-minister-arunraj




