மன்னர் முத்து மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் முதல் இசை வெளியீடான ‘மன்னாரு’ பாடல் வெளியானது. பா.இரஞ்சித் இயக்கிய 'அட்டக்கத்தி', 'மெட்ராஸ்', 'கபாலி', காலா ஆகிய படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பீட்சா, சூது கவ்வும், வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், 'பரியேறும் பெருமாள், இறுதிச்சுற்று, கர்ணன், ஜகமே தந்திரம், ஜகமே தந்திரம், ரெட்ரோ போன்ற தமிழ் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு 'மஜ்ஜா ஸ்டுடியோஸ்' என்ற யூ-டியூப் சேனலில் 'எஞ்சாய் எஞ்சாமி' என்ற தனியிசைப் பாடல் வெளியானது. இந்த பாடலின் வரிகளை அறிவு எழுதியிருந்தார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் அறிவு மற்றும் தீ ஆகியோர் பாடிய இந்த பாடல், யூ-டியூபில் மட்டும் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. துருவ் விக்ரம் நடிக்கும் ‘டிவி 4’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளார். தமிழ் இசை உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வகையில், ‘ரகிட’ என்டர்டெயின்மென்ட் சார்பாக மன்னர் முத்து மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் முதல் இசை வெளியீடான ‘மன்னாரு’ பாடலை ரசிகர்களுக்கு வழங்குகின்றனர்.இந்த பாடல், ஆகஸ்ட் 8 முதல் அனைத்து முக்கிய இசைத் தளங்களிலும் வெளியானது. தனது தனித்துவமான குரலால் மன்னர் முத்து இந்தப் பாடலை பாடியுள்ளார். கென் ராய்சன் இயக்கியுள்ள இந்தப் பாடல், விறுவிறுப்பான காட்சிகளும், உற்சாகமான இசையும் இணைந்த ஒரு புதுமையான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குகிறது. இப்பாடலை பாடலாசிரியர்கள் கே.காட்டியன், கானா பிரான்சிஸ் ஆகியோர் எழுதியுள்ளனர். இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மன்னாரு’ பாடல், புதிய இசைப் பயணத்தின் சிறப்பான தொடக்கமாக அமையும் என குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். Here we goooooo! is here for all of you! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/santhosh-narayanan-mannar-muthus-new-music-album-out




