சென்னை, 2016 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் - எதிரியின் வீட்டிற்குள் புகுந்து அடித்த புதிய பாரதம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து, நயினார் நாகேந்திரன் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- உரி தாக்குதல் காலங்காலமாக பயங்கரவாத தாக்குதல்களை தாங்கிக்கொண்டு, வெறும் கண்டன அறிக்கைகளோடும் மெழுகுவர்த்தி அஞ்சலிகளோடும் நின்ற பலவீனமான அணுகுமுறையை 'உரி' தாக்குதலுக்கு பிறகு சுக்குநூறாக உடைத்தெறிந்தார் பிரதமர் மோடி. எதிரியை வேரறுங்கள் உலக நாடுகளின் அழுத்தங்களை துச்சமென மதித்து, "என் நாட்டு வீரர்களின் ரத்தத்திற்கு பழிவாங்கும் நேரம் இது; எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி எதிரியை வேரறுங்கள்" என்று ராணுவத்திற்கு முழு ஆக்ரோஷ சுதந்திரத்தையும் தார்மீக பலத்தையும் வழங்கிய அவரது இரும்பு தலைமை, இந்திய பாதுகாப்பு வரலாற்றையே புரட்டிப்போட்டது. பயங்கரவாத முகாம்கள் அந்தத் துணிச்சலான உத்தரவை ஏந்தி நள்ளிரவில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிய 'பாரா ஸ்பெஷல் போர்ஸ்' கமாண்டோக்கள், எதிரியின் பயங்கரவாத முகாம்களை தரைமட்டமாக்கி 40-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை வேட்டையாடினர். நமது வீரர்களில் ஒருவருக்கு கூட சிறு காயமின்றி கம்பீரமாக தாயகம் திரும்பி உலகையே அதிர வைத்தனர். சர்ஜிக்கல் தாக்குதல் "அத்துமீறினால் வீட்டிற்குள் புகுந்து அடிப்போம்" என நிரூபித்த இந்த சர்ஜிக்கல் தாக்குதல், பிரதமர் மோடியின் தீர்க்கமான முடிவாலும் வீரர்களின் தீரத்தாலும் எழுதப்பட்ட புதிய பாரதத்தின் தன்மான புரட்சி! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 2016 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் - எதிரியின் வீட்டிற்குள் புகுந்து அடித்த புதிய பாரதம்! காலங்காலமாகப் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தாங்கிக்கொண்டு, வெறும் கண்டன அறிக்கைகளோடும் மெழுகுவர்த்தி அஞ்சலிகளோடும் நின்ற பலவீனமான அணுகுமுறையை 'உரி' தாக்குதலுக்குப் பிறகு சுக்குநூறாக உடைத்தெறிந்தார்… — Nainar Nagenthran (@NainarBJP) September 29, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/surgical-strike-a-new-india-that-entered-and-hit-inside-enemy-home-nainar-nagendran




