புது டெல்லி, குழந்தைகளின் உடல் பருமனை தடுக்க பாக்கெட் உணவுகளில் சிவப்பு எச்சரிக்கை லேபிள் இடம் பெற வேண்டும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களால் குழந்தைகளிடையே உடல் பருமன் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கவும், நுகர்வோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாக்கெட் உணவுகளில் "சிவப்பு எச்சரிக்கை லேபிள்" ஒட்டும் புதிய நடவடிக்கை பரவலாக ஆலோசிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சிவப்பு நிற அறுகோண எச்சரிக்கை லேபிள் அதிக அளவு சர்க்கரை, உப்பு அல்லது செறிவூட்டப்பட்ட கொழுப்பு உள்ள பாக்கெட் உணவுகளின் முன்பக்கத்தில் கட்டாயமாக சிவப்பு நிற அறுகோண எச்சரிக்கை லேபிள் இடம்பெற வேண்டும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) முன்மொழிந்துள்ளது. அதிக சர்க்கரை, அதிக உப்பு, அல்லது அதிக கொழுப்பு எச்சரிக்கைகள் பெரிய எழுத்துகளில் இடம்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் தொடர்பாக உச்சநீதிமன்றம் எழுப்பிய கவலையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/new-measure-to-prevent-childhood-obesity-red-warning-label-on-packet-foods




