பெங்களூரு, ஏ.சி. ரெயில் பெட்டியை முதலிரவு அறைபோல அலங்கரித்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, ஏ.சி. ரெயில் பெட்டிக்குள் பயணி ஒருவர் விளக்கேற்றி, ஊதுபத்தி கொளுத்தி பூஜை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூடப்பட்ட ரெயில்பெட்டிக்குள் தீயை பற்றவைத்து மற்ற பயணிகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியதாக நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். “இது பக்தி அல்ல; பாதுகாப்பை அலட்சியம் செய்வது" என்றும், “இவரை ரெயில்வே பயணத்திலிருந்து தடை செய்ய வேண்டும்" என்றும் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் எந்த ரெயிலில், எந்த பெட்டியில் நடை பெற்றது என்பது போன்ற தகவல்களை கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக ரெயில்வே அறிவித்தது. அதுபற்றி உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில் வீடியோ வைரலாக பரவி வருகிறது. சில வாரங்களுக்கு முன் டெல்லியில் இருந்து மும்பை சென்ற ரெயிலில் போஜை நடைபெற்ற வீடியோ சமூக வ்வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பயணிகள் ரெயில் பெட்டியில் பூஜை நடைபெறவில்லை என மத்திய ரெயில்வே விளக்கம் அளித்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/passenger-bows-to-lord-while-lighting-a-lamp-in-ac-train-compartment




