தூத்துக்குடி, தூத்துக்குடி ராஜகோபால் நகர் 4-வது தெருவைச் சேர்ந்த பெருமாளின் மகன் இசக்கி மகாராஜன் (17), தூத்துக்குடியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மின்சாரம் மற்றும் மின்னணுவியல் (EEE) படித்து வந்தார். கல்லூரிக்கு முறையாகச் செல்லாததால் பெற்றோர் அவரைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வீட்டில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்ததாகத் தெரிகிறது. தூக்கிட்டுத் தற்கொலை இந்த நிலையில், நேற்று பெற்றோர் சொந்த ஊரான தட்டப்பாறைக்கு சென்றிருந்தபோது, இசக்கி மகாராஜன் தனது தாயை செல்போனில் தொடர்புகொண்டு பணம் கேட்டதாகவும், இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஆத்திரமடைந்த அவர், வீட்டிலிருந்த தொலைக்காட்சி, கண்ணாடி மற்றும் பாத்திரங்களை சேதப்படுத்தியதுடன், வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை கம்பியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மாலை நேரத்தில் பெற்றோர் செல்போனில் தொடர்புகொண்டபோது அவர் அழைப்பை ஏற்காததால், உறவினர் ரகு வீட்டுக்குச் சென்று பார்த்தபோது இசக்கி மகாராஜன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிப்காட் போலீசார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழப்புக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/polytechnic-student-commits-suicide-over-family-dispute-in-thoothukudi




