சென்னை, மைசூரு - கேரள மாநிலம் கண்ணூர் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மைசூரு - கண்ணூர் இடையே சிறப்பு ரெயில் மைசூருவில் இருந்து ஆகஸ்டு 25-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06227) மறுநாள் மதியம் 2 மணிக்கு கண்ணூரை சென்றடையும். மறுமார்க்கத்தில், கண்ணூரில் இருந்து ஆகஸ்டு 26-ந்தேதி மாலை 6.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06228) மறுநாள் காலை 8.35 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தை சென்றடையும். இதேபோல், மைசூருவில் இருந்து ஆகஸ்டு 29-ந்தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06229) மறுநாள் மாலை 5.50 மணிக்கு கண்ணூர் ரெயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில், கண்ணூரில் இருந்து ஆகஸ்டு 30-ந்தேதி இரவு 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06230) மறுநாள் காலை 10 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்டை சென்றடையும். 20 பெட்டிகள் 20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில்கள் தமிழகத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-mysore-kannur-via-salem-erode-tiruppur




