புதுடெல்லி, உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் தேர்தல் நடக்க உள்ளது. அங்கு தேர்தல்களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆண்டுக்கு ரூ.40,000 இந்நிலையில், இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்று சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், 'ஸ்ரீ சம்மான் சம்ருத்தி யோஜனா' (பெண்களுக்கான கண்ணியம் மற்றும் செழிப்புத் திட்டம்) என்கிற திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதன் கீழ் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 வழங்கப்படும் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது. மேலும் 12-ம் வகுப்பு முடித்த பெண்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதுகுறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கூறும்போது, ''ஸ்ரீ சம்மான் சம்ருத்தி யோஜனா என்பது, மக்கள் தொகையில் 50% பங்கு வகிக்கும் பெண்களுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவதற்கான ஒரு உறுதிமொழி. இந்த தொகை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படும்'' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/rs-40000-per-year-for-women-if-voted-to-power-in-up-samajwadi-leader-akhilesh-yadav-announces




