புதுடெல்லி, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- மனமார்ந்த நல்வாழ்த்து புனிதமான விநாயகர் சதுர்த்தி நன்னாளில், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் அனைத்து இந்திய சகோதர, சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். விநாயக பெருமான் ஞானம், செழிப்பு மற்றும் மங்களகரமான தொடக்கம் ஆகியவற்றின் சின்னமாக விளங்குகிறார். முன்னேற்ற பாதை விநாயகர் சதுர்த்தி பண்டிகை நம் வாழ்வில் புதிய ஆற்றலையும், அறிவையும், நேர்மறை சிந்தனைகளையும் கொண்டுவருகிறது. இந்த புனிதமான பண்டிகை, வாழ்க்கையில் புதிய தீர்மானங்களுடன் முன்னேற்ற பாதையில் நாம் அனைவரும் முன்னோக்கி செல்ல நம்மை ஊக்குவிக்கிறது. விநாயகப் பெருமான் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டுவர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். உறுதி ஏற்போம் இந்த நன்னாளில், தேசத்தை கட்டியெழுப்புவதற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பங்களிப்போம் என்று உறுதி ஏற்போம். இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/president-droupadi-murmu-extends-ganesh-chaturthi-greetings




