சென்னை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; "மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் நமது மத்திய அரசின் PM SETU திட்டத்தின் கீழ், சுமார் ரூ.1,440 கோடி நிதிச் செலவில் அம்பத்தூர், கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை, திருச்சி மற்றும் ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள 30 ஐடிஐ கல்லூரிகள் நவீனமயமாக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பை முழு மனதுடன் வரவேற்று மகிழ்கிறேன். தமிழகத் தொழிற்பயிற்சி நிலையங்களில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பிற நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த முன்னெடுப்பின் மூலம், நமது இளைய சமுதாயத்தினரின் வளமான எதிர்காலம் வலிமையாக வடிவமைக்கப்படும். தொழில்துறையில் ஓர் புது புரட்சி உண்டாகும்! மாணவர்களின் நலனையும், தொழில்துறையின் வளர்ச்சியையும் ஒருசேர முன்னேற்றும் இத்திட்டத்தினை நமக்கு வழங்கிய மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modis-government-is-elevating-tamil-nadus-higher-education-sector-nainar-nagendran-praises




