சென்னை, பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி மீதான பாலியல் வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மூலம் சீரழித்த குற்றத்துக்காக வீரமணி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் புகார் அளித்த போது முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடங்கி உள்ளது. அந்தவகையில், இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி எந்த தகவலையும் கண்டறிய முடியவில்லை என கோர்ட்டில் இறுதி அறிக்கை அளித்த விசாரணை அதிகாரிகளான விபசார தடுப்புப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த யாஸ்மின், இன்ஸ்பெக்டர்கள் மகேஷ்குமார், ராஜலட்சுமி ஆகியோர் மீதும், இந்த புகார் தொடர்பான விசாரணையை முறையாக மேற்பார்வையிடாத அப்போதைய சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கண்ணன், போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் மீதும் நடவடிக்கை பாய்ந்தது. அருண், யாஷ்மின் ஆகியோர் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். வீரமணிக்கு எதிரான பாலியல் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. ஐஜி தேன்மொழி தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் குழுவில் நான்கு பெண் போலீஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில், மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா இன்று முறையீடு செய்தார். அதில், இந்த வழக்கில் சிறுமிகளின் விடியோக்கள் வெளியாகியுள்ளன. காவல் துறை உயர் அதிகாரிகள் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை பிற்பகல் அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. காவல் துறையினர் புலன் விசாரணையை தொடரட்டும். முறையீடு தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. இதேபோல, வழக்கறிஞர் நிவ்யா, சிறுமிகளின் விடியோக்கள் வெளியான விவகாரம் தொடர்பாக நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன் முறையீடு செய்தார். முறையீட்டை கேட்ட நீதிபதி, இதுதொடர்பாக மனு தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/gem-veeramani-case-plea-in-high-court-seeking-cbi-inquiry




