சென்னை, தமிழ் திரையுலகின் நடிப்புக்கு புதிய இலக்கணத்தை உருவாக்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது நடிப்பாற்றல், வசன உச்சரிப்பு, உடல்மொழி என ஒவ்வொரு அம்சமும் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிவாஜி கணேசனுடனான தனது கடைசி சந்திப்பு மற்றும் அதில் நடந்த நெகிழ்ச்சியான தருணங்களை கவிஞர் வைரமுத்து நினைவுகூர்ந்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- இன்னும் சிலவாரங்களே சிவாஜி உயிரோடிருப்பார் என்று தெரியாத நேரம் அப்பல்லோ மருத்துவமனை வலிக்காமல் கதவுதட்டி உள்நுழைகிறேன் ஒருக்களித்துப் படுத்திருந்தார் சிவாஜி பணியாளர் உடம்பு பிடித்துக்கொண்டிருந்தார் மூலை நாற்காலியில் பத்திரிகை பார்த்துக்கொண்டிருந்தார் கமலா அம்மையார் மென்மையாய் மௌனம் உடைத்தேன் "வணக்கமய்யா!" அறிதுயிலில் இருந்தவர் சிறிது கண்திறந்தார் "வைரமா? வா" "நீங்க நலமடைவதை உணர்கிறீர்களா?" "எங்கப்பா? உடம்பு வலிக்குது" "கொஞ்சநஞ்ச உழைப்பா? இந்த ஒரு உடம்பில் இருநூறு ஆண்டு வாழ்ந்திருக்கிறீர்கள். ஊருக்குச் சந்தோஷம்கொடுக்க உங்கள் உடம்பைத் தேய்த்திருக்கிறீர்கள்" “சொல்லு; அங்க உக்காந்திருக்காளே உங்க அம்மா அவகிட்டச் சொல்லு" கொஞ்சநேரம் இருந்தேன் “விரைவில் உங்களை வீட்டில் பார்க்கிறேன்; விடைபெற்றுக் கொள்ளவா?” “போயிட்டு வா; போறதுக்கு முன்னால உங்க அம்மாகிட்ட எனக்கு ஒரே ஒரு வாழைப்பழம் குடுக்கச் சொல்லிட்டுப் போ" "அம்மா! டாக்டரைக் கேட்டுக் குடுங்க" இதுதான் நான் கடைசியாய் முகம் பார்த்ததும் குரல் கேட்டதும் அந்தக் காட்சி என் கனவுகளில் எப்போதாவது வந்துவந்து போகிறது நீ இறந்தது ஒருமுறைதான்; ஒவ்வொரு படத்திலும் நித்தம் நித்தம் பிறந்துகொண்டிருக்கிறாய் புகழ் வணக்கம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/you-are-being-reborn-day-after-day-in-every-film-vairamuthus-tribute-to-sivaji-ganesan



