இயக்குநர் வெற்றி மாறனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் குழந்தைகள் முன்னிலையில் வீரவாளை பெற்றுக்கொண்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிலம்பரசனுடன் ‘அரசன்’ தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் கைவசம் ‘அரசன்’, ‘ராஜன் வகையறா’ படங்கள் உள்ளன. இதில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மேலும் ‘அரசன்’ படம் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். ராஜன் வகையறா இதனிடையே, ‘ராஜன் வகையறா’ படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் அமீர் கதாபாத்திரத்தின் இளம்வயது வாழ்க்கையில் நடிகர் கென் கருணாஸ் நடித்து வருகிறார். பிறந்தநாள் வாழ்த்து தனித்துவமான படைப்புகளால் தமிழ் சினிமாவை உச்சிக்குக் கொண்டு சென்ற இயக்குநர் வெற்றிமாறன் நேற்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். வீரவாள் பரிசு ஆள் உயர மாலை, கேக் வெட்டு என கொண்டாட்டம் கலை கட்டிய நிலையில் அந்த விழாவில் வெற்றி வீரவாள் ஒன்று பரிசாக வழங்கப்பட்ட காட்சி தான் தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெற்றிமாறனுக்கு வீரவாள் வழங்கப்பட்டதும், சிறுவர்கள் முன்னிலையில் அதை கையில் தூக்கிக் காட்டிய காட்சிகளும் இடம்பெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. zero social responsibility. — SURO (@Suro_pov) September 4, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/veeraval-at-the-birthday-celebration-vetrimaaran-caught-in-controversy



