திருப்புவனம், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி பகுதியில் மத்திய-மாநில அரசுகள் சார்பில் ஏற்கனவே 10 கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது. 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைக்கப்பெற்று கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவ-மாணவி கள் என தினமும் ஏராளமானோர் வந்து பார்வையிட்டும், 'செல்பி' எடுத்தும் மகிழ்கின்றனர். இதேபோல் கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்திலேயே திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திறந்தவெளி அருங்காட்சியகத்தை தினமும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், மாணவ, மாணவிகள், வெளிநாட்டினர் என பார்வையிட்டு வருகின்றனர். 11-வது கட்ட அகழாய்வு கீழடி 11ஆம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறித்த பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 9 குழிகள் தோண்டப்பட்டு உறை கிணறுகள், சுடுமண பானைகள், சுருள வடிவ, பீப்பாய் வடிவ, மூடிய நிலையில், திறந்த நிலையில் வடிகால் அமைப்புகள், செங்கல் கட்டுமானங்கள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. கல்வியில் சிறந்து விளங்கிய சமுதாயம் முதன் முதலில் தோண்டப்பட்ட குழியில் 160 செ.மீ., ஆழத்தில் 20 செ.மீ., விட்டமும், ஒரு அடி உயரமும் கொண்ட இரு நிற சுடுமண் பானை முழுமையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. பானையின் மேற்பகுதியில் மீன் உருவம் கோட்டு சித்திரமாக வரையப்பட்டுள்ளது. ஏற்கனவே கீழடியில் மீன் உருவம் பதித்த உறை கிணறு, பானை ஓடு உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் கல்வியில் சிறந்து விளங்கிய சமுதாயமாக கீழடி மக்கள் விளங்கி இருக்க கூடும் என்பதற்கு சான்றாக இவை கருதப்படுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-pot-engraved-with-a-fish-image-was-discovered-in-keezhadi




