மும்பையின் கட்கோபர் கிழக்குத் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ பராக் ஷா, ரூ. 5,000 கோடி சொத்து மதிப்பு கொண்ட இந்தியாவின் மிகப்பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவர். பராக் ஷாவின் ஆன்மீக குரு, ஜைன மதத்தைப் பின்பற்றும் நம்ரமுனி மகராஜ். இவர் பராக் ஷாவுக்கு `சாதாரண மனிதர்கள் தினமும் சந்திக்கும் வாழ்க்கையின் கடினமான உண்மைகளையும் துன்பங்களையும் நேரடியாக உணர்ந்து கொள்வதற்காக, ஒரு நாள் பிச்சைக்காரராக வாழும்படி அறிவுறுத்தியிருக்கிறார். அதை ஏற்றுக்கொண்ட பராக் ஷா ஒருநாள், பணம் தரக்கூடிய அனைத்து ஆடம்பர வசதிகளையும், பாதுகாப்புகளையும் துறந்து ஒரு நாள் பிச்சைக்காரராக வலம் வந்திருக்கிறார். எம்.எல்.ஏ பராக் ஷா தெருக்களில் பிச்சை எடுத்து, அலைந்து திரிந்து, கடுமையான உடலுழைப்பையும், பொதுமக்களின் அவமதிப்புகளையும் அவர் சந்தித்திருக்கிறார். இது தொடர்பாக பராக் ஷா பேசும்போது, ``என் குருவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, ஏழை பிச்சைக்காரர் போல உருமாறி கட்கோபர் தெருக்களில் இறங்கினேன். அங்கு பிச்சை எடுத்தும், தெருவிலேயே சாப்பிட்டும், ஒரு பிச்சைக்காரனின் வாழ்க்கையில் இருக்கும் உண்மையான வலியையும் அவமானத்தையும் அனுபவித்தேன். இந்த அனுபவம் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. என் குருவின் கட்டளை என் நன்மைக்காகத்தான் இருக்கும். பணம், புகழ் மற்றும் அதிகாரம் மனிதனுக்குள் அகந்தையை உண்டாக்கும். அந்த அகந்தையை அழித்து என்னை எப்போதும் அடக்கத்துடன் வைத்திருக்க இந்த அனுபவம் உதவியது. பிச்சைக்காரன் வேடத்தில் நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கே சென்றபோது, என் சொந்த காவலாளியே என்னை வெளியே தள்ளினார். எம்.எல்.ஏ பராக் ஷா எப்போதும் பிறருக்கு உதவி செய்யும் என் நண்பர் ஒருவரிடம் சென்றபோது, அவரும் துரத்திவிட்டார். மக்கள் மனிதர்களை மதிப்பதில்லை, மாறாக அவர்களிடம் இருக்கும் பணம், பதவி மற்றும் அதிகாரத்தை மட்டுமே மதிக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன். மும்பையில் மனிதநேயம் இன்னமும் வாழ்கிறது. சிலர் என் மீது பரிதாபப்பட்டு 20 ரூபாய் தர்மம் கொடுத்தார்கள்" என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். பின்னர் தன் வேடத்தைக் கலைத்துவிட்டு சாதாரண மனிதராக அதே இடங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களிடம் பேசி நிலைமையைக் கேட்டறிந்தார். "தவெக செய்வது Horse Trading அல்ல, Horse Racing" - பிரவீன் சக்கரவர்த்தி விளக்கம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/trending/viral/mla-parag-shah-lived-as-a-beggar-for-day-in-accordance-with-his-spiritual-gurus-command



