சென்னை அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு, முதல்-அமைச்சர் விஜய் கட்சியில் பதவிகளை அறிவித்து உள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை த.வெ.க. கைப்பற்றியது. தி.மு.க.வுக்கு 59 இடங்களும், அ.தி.மு.க.வுக்கு 47 இடங்களும், கிடைத்தன. இதனால், ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது, தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் (5), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகியவற்றின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்தது. த.வெ.க.வுக்கு ஆதரவு இதனை தொடர்ந்து, கடந்த மே மாதம் 10-ந் தேதி, தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த சூழலில், தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசு மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அ.தி.மு.க.வை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள், த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினர். இதனையடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு கொடுத்தது. இதற்கிடையே 4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் ஐக்கியமானார்கள். நீண்ட இழுபறிக்கு பின்னர் மற்ற 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தனர். இதனால் அவர்கள் மீதான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற நடவடிக்கை எடுத்தார். எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா எனினும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), டாக்டர் சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 பேர், அடுத்தடுத்து தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். முக்கிய பொறுப்புகள் அவர்களுக்கு த.வெ.க.வில் பெரிய அளவில் கட்சி பொறுப்புகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், அவர்களில் சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன்படி, புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளராக சி.விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கரூர் மாவட்ட அமைப்பு செயலாளராக எம்.ஆர். விஜயபாஸ்கர், தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளராக இசக்கி சுப்பையா நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோன்று, மதுராந்தகம் மரகதம் குமரவேலுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டு உள்ளது. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கூடுதலாக துணை பொதுச்செயலாளர் பதவியும் அளிக்கப்பட்டு உள்ளது. அவர் இரட்டை பதவிகளை வகிப்பார். இதேபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், எஸ்.வளர்மதி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்பட அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் த.வெ.க.வில் ஐக்கியமானார்கள். முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தி.மு.க.வில் இணைந்தார். இதுபோக, அ.தி.மு.க.வுக்குள்ளேயே இன்னும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ளனர். இதனால், தமிழக அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-announces-roles-for-c-vijayabaskar-mr-vijayabaskar-in-tvka




