மதுரை, மதுரை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து நாசம் செய்துள்ள சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பன்றி கூட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த உத்தப்பநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இரவு பகலாக பாடுபட்டு வளர்த்த பயிர்கள் அனைத்தும் தற்போது நன்கு விளைந்து, இன்னும் 10 முதல் 15 நாட்களில் அறுவடை செய்யும் நிலைக்கு தயாராக இருந்தன. இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியிலிருந்து கூட்டம் கூட்டமாக புகுந்த காட்டுப்பன்றிகள், விளைநிலங்களுக்குள் புகுந்து வெறித்தாக்குதல் நடத்தியுள்ளன. சோள கதிர்களை கடித்துக் குதறியதுடன், கால்களால் மிதித்து துவம்சம் செய்துள்ளன. பட்டதாரி விவசாயி விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தால் படித்து முடித்துவிட்டு சொந்த ஊரில் மக்காச்சோளம் பயிரிட்ட பட்டதாரி விவசாயி ஒருவர், காலையில் எழுந்து தோட்டம் சென்று பார்த்தபோது பயிர்கள் அனைத்தும் பாழாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார். இன்னும் பத்தே பத்து நாள்ல அறுவடை செஞ்சு இருப்பேன். அதுக்குள்ள இப்படி மொத்த உழைப்பையும் பன்றிக்கூட்டம் நாசம் பண்ணிருச்சே! வாங்குன கடனை எப்படி அடைக்க போறேன்னே தெரியல" என்று விரக்தியின் விளிம்பிற்கே சென்றுள்ளார். இழப்பீடு வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இனிமேலாவது விவசாய நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகாதவாறு வனத்துறை நிரந்தர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-boars-destroy-corn-crops-in-madurai-farmers-in-distress




