"என் மீதான குற்றச்சாட்டு பொய்யானது, பாலியல் புகார் கொடுத்த பயிற்சி அரிகாரி என்னுடன் ஏற்கெனவே ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்தான்" என்று குற்றம்சாட்டப்பட்ட பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது, தெலங்கானாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதய்கிருஷ்ணா ரெட்டி ஹைதராபாத்திலுள்ள போலீஸ் அகடாமியில் பயிற்சி பெற்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரியைப் பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததாக பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரி உதய்கிருஷ்ணா ரெட்டி மீது சில நாள்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உதய்கிருஷ்ணா ரெட்டி உள்துறை அமைச்சகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரி போலீஸில் கொடுத்த புகாரில், 'உதயகிருஷ்ணா ரெட்டி கடந்த சில மாதங்களாக எனக்குப் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருகிறார். மொபைல் போனில் ஆபாச தகவல்களையும் படங்களையும் அனுப்பி மிரட்டியும் வந்தார். என் தனிப்பட்ட படத்தை என் கணவருக்கு அனுப்பியதோடு மற்றவர்கள் மத்தியில் என்னைப் பற்றி அவதூறான விஷயங்களைப் பரப்புகிறார்' என, பல விஷயங்களைத் தெரிவித்திருந்தார். நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து, குற்றங்களைக் குறைத்து, பெண்களுக்குப் பாதுகாப்பைத் தரக்கூடிய காவல்துறையைத் தலைமையேற்று வழிநடத்த சிறந்த அதிகாரிகளை தயார் செய்யும் பயிற்சி மையத்திலேயே பெண் அதிகாரிக்குப் பாதுகாப்பு இல்லையா? எனக் கேள்விகளை பலரும் எழுப்பினார்கள். ஆனால், ``இது என் மீது சுமத்தப்பட்ட பொய்ப் புகார்" என்று ஏற்கெனவே மறுத்து வந்த உதய்கிருஷ்ணா ரெட்டி, தற்கொலைக்கு முயன்றதாகச் சொல்லப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தன் மீதான வழக்கை ரத்து செய்ய தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ள விஷயங்கள், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் அதில், ``பயிற்சி பெண் ஐ.பி.எஸ் அதிகாரியும் நானும் சில மாதங்களாக காதலித்து வந்தோம், ரிலேஷன்ஷிப்பிலும் இருந்தோம். திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்ததால், அவருக்கு பொருளாதர ரீதியாகப் பல உதவிகளையும் செய்தேன். பிறகு என் மீது சந்தேகப்பட்டு விலகிச் சென்றவர், வேறொரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை திருமணம் செய்துகொண்டார். அதனால், அவரை நான் மறந்துவிட்ட நிலையில், என் மீதான சந்தேகம் தவறானது என்று கூறியபடி, மீண்டும் என்னை காதலிப்பதாக என் அறைக்குத் தேடி வர ஆரம்பித்து பழையபடி உறவைத் தொடர கட்டாயப்படுத்தினார். திருமணமானவர் என்பதால் நான் மறுத்துவிட்டேன். ஆனால், விடாமல் என் அறைக்கு அடிக்கடி வர ஆரம்பித்தது அவர் கணவருக்குத் தெரிந்ததும், நான்தான் அவரை டார்ச்சர் செய்வதாகக் கூறி என் மீது பழியைப் போட்டுள்ளார். இதனால் என்னை தவறாக நினைத்து பிரச்னை செய்த அவர் கணவரிடம் என் நேர்மையை நிரூபிக்க வேறு வழியில்லாமல் நாங்கள் முன்பு காதலித்ததைக் கூறிவிட்டேன். அதற்கு ஆதாரமாக போட்டோவையும் காட்டினேன். அதனால் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. தன்னுடைய பொய் வெளிபட்டுவிட்டதால் என்னை பழிவாங்க நினைத்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, தற்போது பொய்ப் புகார் கொடுத்துள்ளார். அதனால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறையினரிடம் விளக்கம் கேட்டுள்ளது. பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம், தற்போது பெண் அதிகாரிக்கு எதிராக திரும்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. எளிய குடும்பத்தில் பிறந்த உதயகிருஷ்ணா ரெட்டி, கான்ஸ்டபிளாக போலீஸில் சேர்ந்து பின்பு அப்பணியை ராஜினாமா செய்துவிட்டு, போட்டித் தேர்வுக்கு தீவிரமாக பயிற்சி எடுத்து யு.பி.எஸ்.சி தேர்வு எழுதி கடந்த 2024-ல் ஐ.பி.எஸ்-ஸாகத் தேர்வானவர். இவரின் சாதனையை பல்வேறு அமைப்புகளும் பாராட்டி போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு முன்னுதாரணமாக இவரை அடையாளப்படுத்தி வந்ததாகவும் தெலுங்கு மீடியாக்களில் கூறுகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/udhayakrishna-reddy-ips-plea-against-the-allegations-made-against-him




