சென்னை, மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அம்ரித் பாரத் ரெயில், நெல்லை ரெயில் நிலையம் வந்தடையும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நேரம் மாற்றம் இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அம்ரித் பாரத் ரெயில் (வண்டி எண் 20603), நெல்லை வரும் நேரம் மாற்றியடைக்கப்படுகிறது. அதாவது, ஜல்பைகுரியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், நெல்லையை 3-வது நாள் இரவு 10 மணிக்கு வந்தடைந்தது. செப்டம்பர் 23-ந் தேதி முதல் இந்த ரெயில் 10 நிமிடத்திற்கு முன்னதாக நெல்லை ரெயில் நிலையத்தை வந்தடையும். அதாவது, இரவு 9.50 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்திற்கு வந்து, 5 நிமிடங்கள் கழித்து அங்கிருந்து புறப்பட்டு செல்லும். நாகர்கோவில் ரெயில் நிலையத்தை இந்த ரெயில் 5 நிமிடங்கள் தாமதமாக இரவு 11.05 மணிக்கு சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-nellai-passengers-amrit-bharat-train-timings-changed




