சென்னை, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய், சென்னை திருவான்மியூர் காந்திகிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் முதல்-அமைச்சர் விஜய் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 44,984 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் 34 லட்சத்து 64 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன் பெறுவார்கள். இந்த திட்டத்துக்காக கூடுதலாக ரூ.217.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுடன் அமர்ந்து முதல்-அமைச்சர் விஜய் உணவருந்தியபோது, தனது அருகில் இருந்த மாணவியிடம் உரையாடினார். மேலும் அந்த மாணவி சாப்பிடுவதற்கு முன் கடவுளை வேண்டியதை முதல்-அமைச்சர் நீண்ட நேரம் கவனித்தார். அதன்பின்னர் அந்த மாணவி தனஸ்ரீயிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது அவர் கூறுகையில், என்னுடைய பெயர் கேட்டாங்க. எத்தனாவது படிக்கிறாய் என கேட்டாங்க. அதற்கு நான் 6-வது படிக்கிறேன் என்று கூறினேன். சாப்பிட்ட பின்னர் அனைத்து வகுப்பறைகளையும் பார்த்துவிட்டு வருகிறேன் என்றார். முதல்-அமைச்சரிடம் திருக்குறள் சொன்னேன். "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை". இவ்வாறு மாணவி கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/what-did-the-chief-minister-say-to-vijay-students-interview




