சென்னை, பயிர்க்கடன் வசூல் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 2026-27ஆம் நிதியாண்டில் தகுதி உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்குவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கடுமையான நடவடிக்கை இந்நிலையில், பயிர்க் கடன் தள்ளுபடித் திட்டம் 2026-இன் கீழ் பகுதி தள்ளுபடித் தொகை பெற்ற விவசாயிகள், எஞ்சியத் தொகையினை முழுமையாக செலுத்தி கடனை முடிவு கட்டாமல் தவணை தவறியுள்ள நேர்வில், அக்கடனை வசூல் செய்ய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறியப்படுகிறது. புதிய பயிர்க் கடன் இது தொடர்பாக பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. i. பயிர்க் கடன் நிலுவை தொடர்பான அனைத்து வசூல் நடவடிக்கைகளையும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். ii. பயிர்க் கடனை முழுமையாக நிலுவையின்றி திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கு செப்டம்பர் 30 -ந் தேதிக்குள் புதிய பயிர்க் கடன் வழங்கிட வேண்டும். மேற்காணும் அறிவுரைகளை அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தொடர்புறுத்தி, அவை வழுவாது பின்பற்றப்படுவதை உறுதி செய்திடவும், தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளவும் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/temporary-moratorium-on-crop-loan-collection-new-loans-for-farmers-who-have-paid-their-loans-in-full




