கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், மதுர் பகுதியைச் சேர்ந்தவர் சுமன்ராஜ் (36). ஜிம்மில் பயிற்சியாளராக உள்ளார். சுமன்ராஜுக்குத் திருமணம் ஆகி ஹித்தாச்சி என்ற மனைவியும் 7 வயதில் பெண் குழந்தையும், ஒன்பது மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளன. கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், மீட்பு புரி பகுதியைச் சேர்ந்தவர் நீத்து (25). சுமன்ராஜ் பயிற்சியாளராக இருந்த ஜிம்முக்கு வந்த நீத்துவிற்கும் சுமன்ராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கும்பகோணம் பேருந்து நிலையத்தில் தீ வைத்து கொண்ட நபர் இதனால் சுமன்ராஜ் மனைவி குழந்தைகளைப் பிரிந்து தமிழ்நாட்டிற்கு வந்து சென்னையில் ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். நீத்து கும்பகோணம் அணைக்கரை அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக கடந்த மூன்று மாதங்களாகப் பணிபுரிந்து வருகிறார். சுமன்ராஜ் திருமணமானவர் என்பது தெரிந்த காரணத்தினால் நீத்து சுமன்ராஜிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். சுமன்ராஜ் நீத்துவிடம் தன்னைக் காதலிக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று பலமுறை மிரட்டியும் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சுமன்ராஜ் நீத்து பணிபுரியும் பள்ளிக்குச் சென்று நீத்துவைக் காதலிக்க சொல்லியும், தன்னிடம் பேசுமாறும் தொந்தரவு செய்துள்ளார். ஆனால் நீத்து பேச மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன் நீத்து கேரளாவுக்குச் செல்வதாகக் கூறி அணைக்கரையில் இருந்து பேருந்தில் கும்பகோணம் பேருந்து நிலையம் சென்றுள்ளார். அதே பேருந்தில் சுமனும் வந்திருக்கிறார். கும்பகோணம் பேருந்து நிலையம் வந்ததும், நீத்துவிடம் தன்னைக் காதலிக்கவில்லை என்றால் பெட்ரோல் ஊற்றிக் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என நீத்துவிடம் சுமன்ராஜ் மிரட்டியுள்ளார். இளம் பெண் காதலிக்க மறுத்ததால் தீ வைத்துக் கொண்ட சுமன்ராஜ் இதைதொடர்ந்து நீத்து எனக்கு வேறு ஒருவடன் திருமணம் நிச்சயமாகி விட்டது எனவே நான் கேரளாவுக்குச் செல்கிறேன் என்றதாகச் சொல்கிறார்கள். உடனே சுமன்ராஜ் தான் ஏற்கனவே சென்னையில் இருந்து எடுத்து வந்த பெட்ரோலைத் தன் உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பேருந்து நிலையத்திற்குள் சுமன்ராஜ் உடல் எரிந்த நிலையில் உடையைக் கழற்றியபடி நடந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் தீயை அணைத்து சுமன்ராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உடலில் பல இடங்களில் தீ காயங்கள் இருந்த நிலையில், ஏன் தீ வைத்து கொண்டாய் என பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் கேட்க, நான் காதலிச்ச பெண் வேற கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா அதனால் தீ வைத்து கொண்டேன் என்றுள்ளார். கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சுமன்ராஜ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீத்து, கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை: வி.சி.க பிரமுகர் கொலை - நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறிய பின்னணி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/kerala-gym-trainer-sets-himself-on-fire-after-school-teacher-refuses-his-love




